உயிருள்ள சாட்சி..!

தேவனுக்கே மகிமை உண்டாவதாக..!

 

கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே…இந்த பதிவின் மூலம் மீண்டும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி..கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நாம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ‘திரு.சந்திரபால்’ என்ற ஒரு சகோதரனுக்காக ஜெபித்தோம். மருத்துவர்கள் கைவிட்ட நிலையிலும் இன்னும் ஜீவனை கொடுத்து வருகிறார் நம் அருமை தகப்பன்.

 

அவரது மனைவி திருமதி.தேவி அவர்கள் கருவுற்றிருந்தது நாம் அறிந்ததே. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஒரு அருமையான பெண் குழந்தையை கர்த்தர் அவர்களுக்கு கொடுத்து ஆசீர்வதித்திருக்கிறார். தாயும் சேயும் நலமாக இருக்கின்றனர்.

 

இதில் விசேஷம் என்னவென்றால், ”சகோ.சந்திரபால் அவர்களின் பிறந்தநாளான ஜூன் 7ம் தேதி அன்றே அவரது குழந்தையும் பிறந்திருக்கிறது”.

 

தேவனின் பாதப்படிக்கு சென்றடையும் உங்கள் அனைவரின் ஜெபமும் தான் இவரை இம்மட்டும் தாங்கி வருகிறது. தொடர்ந்து சகோ.சந்திரபால் பூரண சுகம் அடையவும், இவரது மனைவி மற்றும் குழந்தைக்காகவும், குழந்தையின் எதிர்காலத்திற்காகவும், தேவ கிருபை, அறிவு, சமாதானம் இக்குழந்தையோடு என்றும் இருக்கவும், நற்கனி தரும் பிள்ளையாய் வளரவும், தேவனுக்காக சாட்சியாய் நிற்கவும் ஜெபியுங்கள்.

 

”யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார்.” யோபு 42:10

 

மேற்சொன்ன வசனத்தை நினைத்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து ஜெபியுங்கள்..!

 

கிருபை உங்களோடு இருப்பதாக….ஆமென்…!