கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்,

உலகின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவர்கள் அதிக அளவில் துன்புறுத்தப்பட்டு,சிறையில் அடைக்கப்பட்டு,தண்டனைகளுக்கு உட்படுத்தப்பட்டு பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.இன்னும் பல இடங்களில் கிறிஸ்துவுக்காக தங்கள் உயிரையே கொடுக்கின்றனர்.இந்த பதிவை நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த நிமிடத்திலும் நம் கண்ணுக்கு மறைவான ஏதோ ஒரு இடத்தில் கிறிஸ்துவின் இரத்தத்தினால் நமக்கு சகோதர சகோதரியான பலர் கிறிஸ்துவுக்காக தங்கள் ஜீவனை இழந்துகொண்டுதான் இருக்கின்றனர். பலர் ரகசியமாக ஆராதித்துக்கொண்டும் இருக்கின்றனர். உலகில் சுதந்திரமாக தேவனை ஆராதிக்கும் பாக்கியத்தைப் பெற்ற நாம் அறியாத இப்படிப்பட்ட பல காரியங்களை வெளியரங்கமாக்கி அனைவருக்கும் கொண்டு சேர்த்து,அவர்களது விடுதலைக்காக ஜெபிக்க, நமக்கு இப்படிப்பட்ட சுதந்திரத்தைத் தந்த தேவனை துதித்து அவருக்கு நன்றி செலுத்த வைப்பதே நமது இவாஞ்சல் FM-ன் கிறிஸ்தவ செய்திகள் பகுதியின் நோக்கமாகும்.

இதன்படி மே மாதம் சூடான் நாட்டைச் சேர்ந்த மெரியம் யஹியா இப்ராஹிம்” என்ற 8 மாத கர்ப்பிணிப்பெண் முஸ்லீமாக மாற மறுத்ததால்,அவரது பிரவத்திற்குப் பின் கசையடிகள் கொடுத்து தூக்குதண்டனை அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்ட செய்தி நமது இவாஞ்சல் FM-மிலும் வெளியிடப்பட்டது. இந்த செய்தியை வாசித்த அனைவரும் நிச்சயமாக சகோதரி மெரியமின் விடுதலைக்காக ஜெபித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். சகோதரி மெரியமின் விடுதலைக்காக ஏறெடுக்கப்பட்ட பலரது ஜெபம்,பல நாடுகள் மற்றும் பல அமைப்புகளின் முயற்சி ஆகியவற்றிற்கு தேவன் பதிலளித்து புதன்கிழமையன்று சகோதரி மெரியமின் மீது தொடுக்கப்பட்ட வழக்கு திரும்பபெறப்பட்டு அவர் தனது குடும்பத்துடன் சூடானிலிருந்து வெளியேறவும் அனுமதி கிடைக்க தேவன் கிருபை செய்தார்.

 

இந்த காரியத்திற்காக ஜெபித்த அனைவருக்கும் குறிப்பாக இவாஞ்சல் FM ஜெப பங்காளர்களும் நன்றி. அனைத்திற்கும் மேலாக தானியேலின் தேவன் இன்றும் நம்மொவ்வொருவரையும் விடுவிக்க வல்லவராயிருக்கிறதற்காய் அவரை ஸ்தோத்தரித்து அவருக்கு நன்றி செலுத்தவும்.இந்த பதிவை வாசிக்க தங்கள் நேரத்தை செலவழித்தமைக்கு நன்றி.